அமலாக்‍கத்துறை விசாரணைக்‍கு சரணடையக்‍கோரும் ப.சிதம்பரத்தின் முன்ஜாமின் வழக்‍கு - டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் நாளை உத்தரவு

Sep 12 2019 5:29PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஐ.என்.எக்‍ஸ் மீடியா முறைகேடு வழக்‍கில், அமலாக்‍கத்துறையில் சரணடைவது தொடர்பான ப.சிதம்பரத்தின் மனு மீது, டெல்லி சிபிஐ நீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா சட்ட விரோத பணபரிமாற்ற வழக்‍கில், அமலாக்‍கத்துறையில் சரணடைய தயார் என ப.சிதம்பரம், கடந்த 5-ம் தேதி, டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஆனால், சிதம்பரத்தின் முன்ஜாமின் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்ததைத் தொடர்ந்து, அவரை நீதிமன்ற காவலில் வைக்‍க டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. அமலாக்‍கத்துறையில் சரணடைவது தொடர்பான விசாரணை 12-ம் தேதி நடைபெறும் என வழக்‍கை ஒத்திவைத்தது.

டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையில், ப.சிதம்பரத்தை உரிய நேரத்தில் கைது செய்வோம் என தெரிவித்த அமலாக்‍கத்துறை, அவர், தங்களிடம் சரணடைய கோரும் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியது.

சிதம்பரம் தரப்பில் வாதாடிய வழக்‍கறிஞர் கபில் சிபல், முன்பு சிதம்பரத்தை கைது செய்ய துடித்த அமலாக்கத்துறை, தற்போது அமைதியாக இருப்பதாகவும், சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை நீடிக்கவே அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க மறுப்பதாகவும் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், நாளை உத்தரவு பிறப்பிக்‍கப்படும் என டெல்லி சிபிஐ நீதிமன்றம் அறிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00