சவுதி அரேபியா கச்சா எண்ணெய் உற்பத்தி கிடங்குகள் மீது தாக்குதல் எதிரொலி : பெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 முதல் 6 ரூபாய் வரை உயர வாய்ப்பு

Sep 17 2019 12:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி கிடங்குகள் மீது தாக்‍குதல் நடத்தப்பட்டதன் எதிரொலியாக, பெட்ரோல்-டீசல் விலை, லிட்டருக்‍கு 5 முதல் 6 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி கிடங்குகள் மீது ஏமன் ஹவுதி படையினர் நேற்று முன்தினம் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், சுமார் 5.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் தீயில் நாசமடைந்தது. மீண்டும் எண்ணெய் உற்பத்தி தொடங்க நான்கைந்து வாரங்களுக்கு மேல் ஆகும் என்று கூறப்படுகிறது. இதனால், சர்வதேச அளவில் பெட்ரோல்-டீசல் விலை உயரக்கூடிய சூழ்நிலையில், இந்தியாவிலும் அடுத்த 15 நாட்களுக்குள் பெட்ரோல்-டீசல் விலை கணிசமாக உயரக்கூடிய நிலை உருவாகியுள்ளது. பெட்ரோல்-டீசல் விலை, லிட்டருக்‍கு 5 ரூபாய் முதல் 6 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையிலிருந்து 14 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர், 74 ரூபாய் 99 காசுகளுக்‍கும், டீசல், 16 காசுகள் உயர்ந்து 69 ரூபாய் 31 காசுகளுக்‍கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00