ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் - அடுத்த ஆண்டு ஜூலை 1 முதல் திட்டம் அமல் : பஸ்வான் பெருமிதம்

Sep 22 2019 6:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் நுகர்வோர் நலனுக்காக, மத்திய அரசு அமல்படுத்தும் புரட்சிகரமான திட்டம் என்று மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் திரு. ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் மாநிலம், இம்பாலில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், ‍லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்த, மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும்​பொது வினியோகத் துறை அமைச்சர் திரு. ராம்விலாஸ் பஸ்வான் பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தால், பயனாளிகளுக்கு உணவுப்பொருட்கள் வழங்குவது உறுதி செய்யப்படும் என்றும், இந்த திட்டம் நுகர்வோர் நலனுக்காக மத்திய அரசு அமல்படுத்தும் புரட்சிகரமான திட்டம் என்றும், இந்த திட்டம், அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

பாயின்ட் ஆப் சேல் கருவி‌யை பொருத்த அனைத்து மாநிலங்களிலும் உள்ள ரேஷன் கடைகளுக்‍கு மேலும் ஓராண்டு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார். தற்போது 14 மாநிலங்களில் பாயின்ட் ஆப் சேல் கருவிகள் மூலம், வினியோகம் செய்யப்படுகிற‌து என்றும் திரு.பஸ்வான் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00