தமிழகம், குஜராத், அசாம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழைக்‍கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

Sep 22 2019 5:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

குஜராத் மாநிலம், சவுராஷ்டிரா, கு‌ட்ச் ஆகிய இடங்களில், மிக கன மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், குஜராத் மாநிலத்தில் உள்ள சவுராஷ்டிரா, குட்ச் ஆகிய இடங்களில், இன்று மிக கன மழை பெய்யக்கூடும் என்றும், கிழக்கு ராஜஸ்தான், மத்திய பிரதேசம், அந்தமான் நிக்கோபர் தீவுகள், அருணாச்சலப் பிர‍தேசம் ஆகிய இடங்களில், நாள் முழுவதும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசாம், மேகாலயா, நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, தெலங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில், இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், சிக்கிம், ஒடிசா ஆகிய மாநிலங்களில், இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கன மழை பெய்யும் மாநிலங்களில், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00