வங்கிகள் இணைப்பு நடவடிக்‍கையை கைவிட்டு வாராக் கடனை வசூலிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் வலியுறுத்தல்

Sep 22 2019 5:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

வங்கிகள் இணைப்பை கைவிட்டு வாராக் கடனை வசூலிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளன பொதுச் செயலாளர் திரு.வெங்கடாசலம் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழியர்கள் சங்கத்தின் நாற்பதாவது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாச்சலம், மத்திய அரசின் வங்கிகள் இணைப்பு நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது எனக் கூறினார். இந்த நடவடிக்கையால் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த வங்கிகளை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. வாராக்கடன் மட்டும் 3 லட்சத்து பதிமூன்றாயிரம் கோடி உள்ளதாக தெரிவித்துள்ள அவர், இதை வசூலித்தாலே நாட்டில் பொருளாதார சீர்கேடு ஏற்படாது எனக்கூறினார். மேலும் மத்திய அரசின் வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை எதிர்த்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அக்டோபர் 28ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00