ஆக்‍கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் மனித உரிமை மீறல்களை பாகிஸ்தான் நிறுத்தாவிட்டால் அந்த நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது - பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் எச்சரிக்‍கை

Sep 22 2019 6:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆக்‍கிரமிப்பு காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தான் அத்துமீறினால், அந்நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங், 370 வது சட்டப்பிரிவு காஷ்மீரில் ரத்தம் சிந்தும் நிலையை உருவாக்‍கியதாகவும், அங்குள்ள பலரின் கனவு தற்போது பிரதமர் நரேந்திரமோடியால் நிறைவேறியுள்ளதாகவும் கூறினார். இதேபோன்று இந்த சட்டப்பிரிவு காஷ்மீரில் தீவிரவாதத்தை உருவாக்கியதாகவும், இந்த தீவிரவாதம் காஷ்மீரை ரத்தம் சிந்தும் பூமியாக மாற்றியுள்ளதாகவும் கூறினார். மேலும் பாகிஸ்தானியர்கள் இந்திய எல்லைக்‍குள் நுழைந்தால் அவர்கள் திரும்ப போகமாட்டார்கள் என கூறிய அவர், ஆக்‍கிரமிப்பு காஷ்மிர் விவகாரத்தில் பாகிஸ்தான் அத்துமீறலில் ஈடுபட்டால், அந்நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது என பேசினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00