பிரான்ஸ் நாட்டிடமிருந்து கூடுதலாக 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா முடிவு - அடுத்த ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தகவல்

Sep 23 2019 1:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரான்சில் இருந்து மேலும் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் அடுத்த ஆண்டு கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் நாட்டிடமிருந்து வாங்கப்பட்ட முதல் ரஃபேல் போர் விமானம், சில நாட்களுக்கு முன்னர் விமானப்படையில் சேர்க்கப்பட்டது. ஒப்பந்தத்தின்படி வாங்கப்பட உள்ள எஞ்சிய விமானங்கள் அனைத்தும் பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், அடுத்த மாதம் 8-ம் தேதி பிரான்ஸ் செல்லும்போது ஒப்படைக்கப்படவுள்ளன. இந்த நிலையில், இந்திய விமானப்படை மேலும் 36 ரஃபேல் போர் விமானங்களை பிரான்சிடமிருந்து வாங்கவுள்ளதாக இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சிப் பிரிவு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஒப்பந்தம் செய்யப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. கூடுதலாக 36 விமானங்கள் வாங்கப்படும் நிலையில், இந்திய விமானப்படையில் உள்ள ரஃபேல் போர் விமானங்களின் எண்ணிக்கை 72 ஆக உயரும்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00