2024-ம் ஆண்டிற்குள் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் வெளியேற்றப்படுவார்கள் - பிரச்சார கூட்டத்தில் அமித்ஷா பேச்சு

Oct 10 2019 12:46PM
எழுத்தின் அளவு: அ + அ -
சட்ட விரோதமாக குடியேறிய அனைவரும் அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்குள் வெளியேற்றப்படுவார்கள் என்று மத்திய உள்து‌றை அமைச்சர் திரு.அமித் ஷா தெரிவித்துள்ளார்.

ஹரியானா மாநிலத்தில், வரும் 21-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, கைதால் மாவட்டத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பா.ஜ.க., தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான, திரு. அமித் ஷா, இந்தியாவில் சட்ட விரோதமாக குடியேறிய அனைவரையும், அவரவர் நாட்டுக்கே அனுப்ப வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் கொள்கை என்றும், சட்ட விரோதமாக குடியேறியவர்கள் அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்குள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

ஜம்மு - காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்க, முந்தைய அரசுகளுக்கு துணிச்சல் இல்லை என்று கூறிய அவர், காஷ்மீரின் வளர்ச்சியை கருதியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும், ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலில், பா.ஜ.க., மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் அமைச்சர் திரு. அமித்ஷா கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 49.30 Rs. 49000.00
மும்பை Rs. 49.30 Rs. 49000.00
டெல்லி Rs. 49.30 Rs. 49000.00
கொல்கத்தா Rs. 49.30 Rs. 49000.00