கலாச்சாரத்தை கேலி செய்வதே காங்கிரஸ் கட்சியின் வழக்கம் : மத்திய பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் கடும் விமர்சனம்

Oct 10 2019 12:53PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்திய கலாச்சாரத்தையும், ஹிந்து மத நம்பிக்கைகளையும் கேலி செய்வதையே காங்கிரஸ் கட்சி வழக்கமாக கொண்டுள்ளது என்று மத்திய பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் திரு. சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டிடமிருந்து ரபேல் போர் விமானத்தை பெற்றுக்‍கொண்ட பாதுகாப்பு‌த் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், விமானத்திற்கு பூஜை செய்தார். இதை, காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்தது.

இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம், போபாலில், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த பா.ஜ.க., மூத்த தலைவரும், அம்மாநில முன்னாள் முதலமைச்சருமான சிவ்ராஜ் சிங் சவுகான், இந்திய கலாச்சாரத்தையும், ஹிந்து மத நம்பிக்கைகளையும் கேலி செய்வதையே, காங்கிரஸ் கட்சி வழக்கமாக கொண்டுள்ளது என்று விமர்சித்தார்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பூஜை செய்ததில் என்ன தவறு இருக்கிறது என்றுக் கேட்ட அவர், ஹிந்து மதத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சி உள்ளதா என்றும், பூஜை செய்ததை கிண்டல் செய்த காங்கிரஸ் கட்சி, பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் திரு. சிவ்ராஜ் சிங் சவுகான் வலியுறுத்தினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 49.30 Rs. 49000.00
மும்பை Rs. 49.30 Rs. 49000.00
டெல்லி Rs. 49.30 Rs. 49000.00
கொல்கத்தா Rs. 49.30 Rs. 49000.00