பெட்ரோலியப் பொருட்களை ஜி.எஸ்.டி.யின் கீழ் கொண்டுவர வேண்டும் : பெட்ரோலியத்துறை அமைச்சர் வேண்டுகோள்

Oct 15 2019 1:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

பெட்ரோலியப் பொருட்களை ஜி.எஸ்.டி. வரம்பின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று பெட்ரோலியத்துறை அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் கேட்டுக்‍கொண்டுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டார். அதில் உரையாற்றிய அவர், பெட்ரோலியத்துறை சிக்கலானது என்றும், பெட்ரோலிய வருவாயை சார்ந்தே மாநில அரசுகள் இருப்பதாகவும் தெரிவித்தார். இதன் காரணமாகவே, பெட்ரோலியப் பொருட்கள், ஜி.எஸ்.டி. வரம்பின் கீழ் கொண்டு வரப்படவில்லை என்று கூறினார். ஆனால், பெட்ரோலியப் பொருட்களை, ஜி.எஸ்.டி. வரம்பின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை எழுந்து வருவதால், இதனை, மத்திய நிதியமைச்சகம் பரிசீலிக்‍க வேண்டும் என்று அவர் கேட்டுக்‍ கொண்டார்.

அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்த கோரிக்கையை நிறைவேற்றுவது குறிற பரிசீலிக்க வேண்டும் என்று, மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமனுக்‍கு, திரு. தர்மேந்திர பிரதான் வேண்டுகோள் விடுத்தார். அடுத்த 5 ஆண்டுகளுக்குள், எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில், உள்கட்டமைப்பை மேம்படுத்த 11 ஆயிரத்து 800 கோடி டாலர் முதலீடு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00