யானை தந்தங்கள் வைத்திருந்தது தொடர்பான வழக்கு : குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் நடிகர் மோகன்லால் மனு

Oct 15 2019 3:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

யானை தந்தங்கள் வைத்திருந்தது தொடர்பான வழக்கில், தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி, நடிகர் மோகன்லால் கேரள உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

மலையாள நடிகர் மோகன்லாலின் வீட்டிலிருந்து கடந்த 2012-ம் ஆண்டு, 4 யானை தந்தங்களை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, நடிகர் மோகன்லால் மீது கோடநாடு வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

ஆனால், தந்தங்களை திருப்பி கேட்டு, வனத்துறை அமைச்சரிடம் மோகன்லால் கோரிக்கை விடுத்தார். சட்டப்படி தந்தங்களை வீட்டில் வைத்திருக்க அனுமதி இல்லை என்ற போதிலும், கேரள அரசு சட்டத்தில் திருத்தம் செய்து, தந்தங்களை மோகன்லாலிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இது சட்டவிரோதம் எனக்கூறி, கேரள உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு, கோடநாடு வனத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி, நடிகர் மோகன்லால் மனுதாக்கல் செய்துள்ளார். அதில், தந்தங்கள் வைத்திருக்க தன்னிடம் உரிமம் இருப்பதாகவும், தனது புகழுக்கு களங்கம் விளைவிக்கவே, இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00