மத்திய பாரதிய ஜனதா ஆட்சியில், G.S.T. வரி விதிப்பு உள்ளிட்ட பல்வேறு மக்‍கள் விரோதச் செயல்களால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைத்துவிட்டது - ராகுல்காந்தி குற்றச்சாட்டு

Oct 15 2019 9:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரதமர் திரு. நரேந்திரமோடி தலைமையிலான, மத்திய பாரதிய ஜனதா அரசு, பண மதிப்பிழப்பு நடவடிக்‍கை, G.S.T. வரி விதிப்பு மற்றும் பல்வேறு மக்‍கள் விரோதச் செயல்களால் நாட்டின் பொருளாதாரத்தையே சீர்குலைத்துவிட்டதாக காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

மஹாராஷ்ட்ரா மாநிலம் Yavatmal மாவட்டத்தில் காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரக்‍ கூட்டத்தில் உரையாற்றிய திரு. ராகுல்காந்தி, மத்திய பாரதிய ஜனதா அரசின் தவறான பொருளாதாரக்‍ கொள்கைகளால் இந்தியா முழுவதும் வேலையில்லாத் திண்டாட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ளதாகத் தெரிவித்தார். திரு. நரேந்திரமோடி, ஆட்சியில் நீடிக்‍கும் வரை, இப்பிரச்னைக்‍குத் தீர்வு காண முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். அடுத்த 6 மாதங்களில், நாடு முழுவதும் வேலையில்லாத இளைஞர்களின் எண்ணிக்‍கை 2 மடங்காக உயர்ந்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார். பண மதிப்பிழப்பு நடவடிக்‍கை, G.S.T. வரி விதிப்பு ஆகியவற்றால் தங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் சீரழிந்துவிட்டதாக புகார் தெரிவித்ததாகவும், இதே நிலைமைதான் இந்தியா முழுவதும் காணப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00