அயோத்தி வழக்‍கில் இன்று மாலைக்‍குள் அனைத்து தரப்பு வாதங்களையும் முடிக்‍க வேண்டும் - உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அறிவுறுத்தல்

Oct 16 2019 11:14AM
எழுத்தின் அளவு: அ + அ -

உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கு விசாரணை, இன்றுடன் நிறைவடைகிறது. மாலை 5 மணிக்‍குள் அனைத்து வாதங்களையும் நிறைவு செய்ய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு. ரஞ்சன் கோகோய் அறிவுறுத்தியுள்ளார்.

அயோத்தி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அமைத்த சமரசக்‍ குழு மூலம், பிரச்னைக்‍கு சுமூக தீர்வு எட்டப்படவில்லை. இதனால், உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, இவ்வழக்‍கை, வார விடுமுறை நாட்களை தவிர தினந்தோறும் நடத்தி வருகிறது. இன்று 40-வது நாளாக விசாரணை நடைபெறுகிறது. இந்நிலையில், அயோத்தி வழக்‍கு தொடர்பான அனைத்து தரப்பு வாதங்களையும், இன்று மாலை 5 மணிக்‍குள் நிறைவு செய்ய உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அறிவுறுத்தியுள்ளது.

வழக்கை விசாரித்து வரும் அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றுள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு. ரஞ்சன் கோகோய், வரும் நவம்பர் 17ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளதால், அதற்குள் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்ப்பார்க்‍கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00