நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் உறவினருக்கு வீடு விற்பனை செய்ததாக தொடரப்பட்ட வழக்கு - நேரில் ஆஜராகும்படி, முன்னாள் மத்திய அமைச்சர் பிரஃபுல் பட்டேலுக்கு அமலாக்கத் துறை சம்மன்

Oct 16 2019 1:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராகிமின் உறவினருக்கு வீடு விற்பனை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், வரும் வெள்ளிக்கிழமை நேரில் ஆஜராகும்படி, முன்னாள் மத்திய அமைச்சர் திரு. பிரஃபுல் பட்டேலுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில், கடந்த 2007-ம் ஆண்டு, தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் திரு. பிரபுல் பட்டேலுக்கு சொந்தமான மில்லேனியம் டெவலப்பர்ஸ் என்ற நிறுவனம், 15 அடுக்குமாடி குடியிருப்பை கட்டியது.

இதில் இரண்டு தளங்களை, நிழல் உலக தாதா பயங்கரவாதி தாவூத் இப்ராகிமின் கூட்டாளியான இக்பால் மிர்ச்சிக்கு திரு. பிரபுல் பட்டேல் விற்பனை செய்தார். இதில், சட்ட விரோதமாக பணப் ‌பரிமாற்றம் நடைபெற்றதாகக் கூறி, அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு, வரும் 18-ம் தேதி நேரில் ஆஜராகும்படி, திரு. பிரபுல் பட்டேலுக்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர்.

சட்டப்பேரவை தேர்தல் நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவர்களை பா.ஜ.க., அரசு பழிவாங்கி வருகிறது என்று, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00