பிரதமர் நரேந்திர மோடிக்கு நாட்டின் பொருளாதாரம் பற்றி தெரியவில்லை : அரியானா தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ராகுல்காந்தி குற்றச்சாட்டு

Oct 19 2019 5:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரதமர் திரு.நரேந்திர மோடிக்கு நாட்டின் பொருளாதாரம் பற்றி தெரியவில்லை என திரு. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

அரியானா மாநிலம் மகேந்திரகர் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் திரு.ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது அரியானா சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திரு.ராகுல் காந்தி பேசினார். 2004 ஆம் ஆண்டுமுதல் 2014ஆம் ஆண்டுவரை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு என்ன காரணம் என்பது குறித்து விளக்கம் அளித்த திரு. ராகுல், இன்றைய ஊடகங்கள் நாட்டில் நடக்கும் உண்மையான நிலையை மக்களுக்கு எடுத்துச் சொல்வதில்லை எனக்கூறினார். மீறி உண்மையை சொன்னால் அவர்களது வேலை பறிபோய் விடும் நிலை உள்ளது எனக் கூறினார்.

2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை இந்திய பொருளாதாரம் வளர்ந்துள்ளதற்கு முக்கிய காரணம் 100 நாள் வேலை திட்டமும் விவசாயிகள் கடன் ரத்து செய்யப்பட்டதும்தான் என திரு.ராகுல்காந்தி தெரிவித்தார். மோடி தலைமையிலான பாஜக அரசு உண்மையான பிரச்சனைகளில் இருந்து மக்களை திசைதிருப்பி வருவதாக குற்றம் சாட்டிய அவர், பிரதமர் மோடிக்கு நாட்டின் பொருளாதாரம் பற்றி தெரியவில்லை என குற்றம்சாட்டினார்.

பின்னர் டெல்லி திரும்பியபோது மோசமான வானிலை காரணமாக அவரது ஹெலிகாப்டர் அருகில் உள்ல கல்லூரி திடலில் அவசரமாக இறங்கியது. அங்கு கிரிகெட் விளையாடிய இளைஞர்களுடன் ராகுல் காந்தி கிரிகெட் விளையாடினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00