பணிநீக்‍கத்திற்கு எதிராக தெலங்கானாவில், போக்‍குவரத்து கழக ஊழியர்கள் முழு அடைப்பு - ஆட்டோ, டாக்‍சி ஓட்டுனர்களும் ஆதரவு

Oct 19 2019 2:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

தெலங்கானாவில், போக்‍குவரத்து கழக ஊழியர்கள் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு, ஆட்டோ, டாக்‍சி ஓட்டுனர்களும் ஆதரவு தெரிவித்துள்ளதால், அம்மாநிலத்தில் போக்குவரத்து முடங்கியுள்ளது.

தெலங்கானாவில், அரசு போக்குவரத்துக் கழகத்தை அரசுத் துறையாக அறிவிக்க வேண்டும், தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 26 கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கடந்த 5-ம் தேதி முதல் வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர்.

அரசின் காலக் கெடுவுக்குள் பணிக்குத் திரும்பாத சுமார் 48 ஆயிரம் ஊழியர்கள் தாங்களாகவே பதவி விலகியதாக அரசு எடுத்துக்கொண்டதாக முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்தார். எனினும் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம், சாலை மறியல் என போராட்டத்தை போக்குவரத்து ஊழியர்கள் தொடர்ந்து வருகின்றனர். 2 ஊழியர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில், தெலங்கானா அரசுக்‍கு எதிராக, இன்று முழு அடைப்பு போராட்டத்தை போக்குவரத்து ஊழியர்கள் நடத்தி வருகின்றனர். இதற்கு தெலுங்கு தேசம், காங்கிரஸ், பா.ஜ.க., இடதுசாரி கட்சிகள் உள்ளிட்டவை ஆதரவு தெரிவித்துள்ளன. ஆட்டோ, டாக்‍சி ஓட்டுனர்களும் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், தெலங்கானாவில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00