மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி - ஆளுநர் நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம்

Nov 12 2019 8:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

மஹாராஷ்டிர மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அறிவிக்கப்பட்டுள்ளதற்கு தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி கண்டனம் தெரிவித்துள்ளது.

மஹாராஷ்டிர மாநிலத்தில், அரசியல் சாசனப்படி ஆட்சியமைக்‍க ஏதுவான சூழ்நிலை இல்லாத காரணத்தால், கு‌டியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைத்ததாக அம்மாநில ஆளுநர் திரு. பகத் சிங் கோஷ்யாரி தெரிவித்தார். இதற்கு, தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி கண்டனம் தெரிவித்துள்ளது.

மும்பையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் திரு. சரத் பவாருடன், காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்கள் திரு. அகமது படேல், திரு. மல்லிகார்ஜூன கார்​கே ஆலோசனை நடத்தினர்.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் திரு. அகமது படேல், மஹாராஷ்டிர மாநிலத்தில், உச்ச நீதிமன்ற விதிமுறைகளை மீறி குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்து கொள்வதாகவும், சிவசேனா கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

தங்களுக்கு எந்த அவசரமும் இல்லை என்றும், காங்கிரஸ் கட்சியுடனான ஆ‍லோசனைக்கு பிறகு, சிவசேனா கட்சிக்கு ஆதரவு குறித்து அறிவிக்கப்படும் என்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் திரு. சரத் பவார் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00