பிரசில் நாட்டிற்கு புறப்பட்டார் பிரதமர் மோடி : பிரிக்ஸ் நாடுகளின் 11வது மாநாட்டில் பங்கேற்கிறார்

Nov 12 2019 7:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரிக்ஸ் உச்சி மாநாட்‌டில் பங்கேற்பதற்காக, பிரதமர் திரு. ‍நரேந்திர மோடி பிரசில் நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார்.

பிரிக்ஸ் அமைப்பில் பிரசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் அங்கம் வகிக்கின்றன. பொருளாதார ஒத்துழைப்பு, வணிகம் ஆகிய துறைகளில் கூட்டாக பங்களிப்பு அளிக்கும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் இந்த அமைப்பின் மாநாடு நடைபெறுகிறது.

இதன்படி, பிரிக்ஸ் நாடுகளின் 11வது மாநாடு, தென் அமெரிக்க நாடான, பிரேசிலில் நாளையும், நாளை மறுதினமும் நடைபெறுகிறது. எதிர் காலத்திற்கான பொருளாதார வளர்ச்சி என்ற தலைப்பில், இந்த மாநாடு நடைபெற உள்ளது. பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக, இன்று பிற்பகல், டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம், பிரசில் நாட்டிற்கு பிரதமர் மோடி புறப்பட்டுச் சென்றார். மாநாட்டிற்கிடையே, சீன அதிபர் ஷி ஜின்பிங்கை, பிர‌தமர் மோடி நாளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00