டெல்லியில் தொடரும் காற்று மாசு பிரச்னையால் பள்ளிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை அறிவிப்பு - தொழிற்சாலைகளும் நாளை வரை மூடப்பட மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு

Nov 14 2019 11:47AM
எழுத்தின் அளவு: அ + அ -

தலைநகர் டெல்லியில், காற்று மாசு, மிகவும் மோசமடைந்து வரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, இன்றும், நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி உட்பட வடமாநிலங்களில், காற்றின் மாசு அளவு, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 12-ம் தேதி 425 புள்ளிகளாக இருந்த, காற்றின் மாசு அளவு, நேற்று காலை, 457 புள்ளிகளாக அதிகரித்தது. காற்று மாசின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லிக்கு உட்பட்ட மாவட்டங்களில், புகையை வெளியேற்றும் தொழிற்சாலைகள், கல் குவாரிகள் உள்ளிட்டவை, நவம்பர் 15-ம் தேதி வரை மூடியிருக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்குமாறும், அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி, டெல்லியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, இன்றும், நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், உத்தரபிரதேச மாநிலம் Gautam Buddh Nagar மாவட்டத்திற்கு உட்பட பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00