மக்களின் எதிர்பார்ப்புகளை புரிந்து கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணியாற்ற வேண்டும் : மாநிலங்களவையில் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தல்

Nov 19 2019 1:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

மக்களின் எதிர்பார்ப்புகளை புரிந்து கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணியாற்ற வேண்டும் என குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான திரு.வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. மாநிலங்களவையின் 250-வது கூட்டத்தொடராக இந்த கூட்டத்தொடர் அமைந்துள்ள நிலையில், இந்திய அரசியல் மற்றும் நாட்டின் வளர்ச்சியில் மாநிலங்களவையின் பங்களிப்பு என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய திரு.வெங்கய்ய நாயுடு, கடந்த 67 ஆண்டுகளாக நாட்டின் சமூக பொருளாதார மாற்றத்தில் மாநிலங்களவை முக்கிய பங்கு வகித்துள்ளதாக குறிப்பிட்டார். எனினும், மக்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்தால், அவர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படவில்லை என்றே தெரிகிறது என கூறினார்.

நாடாளுமன்ற விதிகளை எம்.பி.க்கள் பின்பற்ற வேண்டும் - மக்கள் பிரச்னைகள் குறித்த விவாதங்களில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்த திரு.வெங்கய்ய நாயுடு, அவை நடவடிக்கைகள் அமைதியாக நடைபெற உறுப்பினர்கள் ஒத்துழைத்தால்தான் மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண இயலும் என்று கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00