கேரளாவில் மாணவர்கள் மீதான போலீசார் தாக்குதலுக்கு கண்டனம் : 2-வது நாளாக சட்டமன்றத்தில் எதிரொலிக்கும் வாளையாறு விவகாரம்

Nov 21 2019 2:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

கேரளாவில் மாவணர் அமைப்பினர் மீது போலீசார் தாக்‍குதல் நடத்தியதை கண்டித்து சட்டமன்றத்தில் இன்று 2-வது நாளாக எதிர்க்‍கட்சி எம்.எல்.ஏக்‍கள் அவையை புறக்‍கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கேரள மாநிலம் வாளையாறு பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு இரண்டு சிறுமிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்‍கு விசாரணை கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த வழக்‍கை சிபிஐ விசாரணை கோரி கேரள மாணவர் சங்கம் சார்பில் அண்மையயில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது போலீசாருக்‍கும் மாணவர்களுக்‍கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பல்வேறு மாணவர்கள் காயமடைந்தனர். இதனை கண்டித்து கேரள சட்டமன்றத்தில் எதிர்க்‍கட்சி எம்.எல்.ஏக்‍கள் நேற்று அவையில் பதாகைகளை ஏந்தியும், ரத்தம் படித்த சட்டைகளுடனும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோன்று இதே கோரிக்‍கையை வலியுறுத்தி இன்று எதிர்க்‍கட்சி எம்.எல்.ஏக்‍கள் ஒட்டுமொத்தமாக அவையை புறக்‍கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கேரள சட்டமன்றத்தில் அவை அலுவலல்கள் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00