ராஜஸ்தானில் காணாமல்போன 6 வயது சிறுமி சடலமாக கண்டெடுப்பு : பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை

Dec 2 2019 3:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
ராஜஸ்தானில் காணாமல் போன 6 வயது சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டத்தில் உள்ள அலிகார் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி, அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சனிக்கிழமையன்று பள்ளி முடிந்து, மாலை 3 மணிக்கு வீட்டுக்கு புறப்பட்டுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் சிறுமி வீட்டுக்கு வராததால், பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்துள்ளனர். அப்போது, பள்ளிக்கு அரை கிலோ மீட்டர் தூரத்தில், சிறுமி சடலமாக கிடந்துள்ளார். சிறுமியின் சீருடையில் இருந்த பெல்ட்டால், கழுத்து இறுக்‍கப்பட்டு அவர் கொலை செய்யப்பட்டிருந்தார். உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், சிறுமி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வழக்‍கு பதிவு செய்துள்ள போலீசார், சிறப்பு குழு அமைத்து, குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3600.00 RS. 3780.00
மும்பை Rs. 3670.00 Rs. 3770.00
டெல்லி Rs. 3665.00 Rs. 3785.00
கொல்கத்தா Rs. 3699.00 Rs. 3839.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.30 Rs. 47300.00
மும்பை Rs. 47.30 Rs. 47300.00
டெல்லி Rs. 47.30 Rs. 47300.00
கொல்கத்தா Rs. 47.30 Rs. 47300.00