பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு நிர்பயா கொல்லப்பட்ட வழக்கு - குற்றவாளிகள் 4 பேருக்கும் விரைவில் தூக்கு உறுதி

Dec 2 2019 5:52PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா, பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் 4 பேருக்கும் விரைவில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ம் தேதி, மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பேருந்தில் 6 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட 6 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர், 6 பேரில் 5 பேர் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர். ஒருவன், சிறுவர் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுவிக்‍கப்பட்டான். 5 பேரில், முக்கிய குற்றவாளியான ராம்சிங், சிறையில் தற்கொலை செய்து கொண்டான்.

பவன்குப்தா, முகேஷ்சிங், வினய் சர்மா, அக்ஷய் தாகூர் ஆகிய 4 பேருக்‍கும் தூக்கு தண்டனை விதிக்‍கப்பட்டது. அதனை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. 4 பேரில், 3 பேர் தங்கள் தண்டனை எதிர்த்து கருணை மனு தாக்‍கல் செய்யாத நிலையில், வினய் சர்மா மட்டும், கருணை மனு தாக்‍கல் செய்துள்ளான். வினய் சர்மாவின் கருணை மனுவை டெல்லி ஆளுநர் நிராகரித்துள்ளார். இதையடுத்து, மனு, மத்திய உள்துறையின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது. வினய் சர்மாவின் கருணை மனுவை குடியரசுத் தலைவரும் நிராகரிக்‍கும் நிலையில், நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்‍கும் விரைவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என தகவல்கள் தெரிவிக்‍கின்றன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3600.00 RS. 3780.00
மும்பை Rs. 3670.00 Rs. 3770.00
டெல்லி Rs. 3665.00 Rs. 3785.00
கொல்கத்தா Rs. 3699.00 Rs. 3839.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.30 Rs. 47300.00
மும்பை Rs. 47.30 Rs. 47300.00
டெல்லி Rs. 47.30 Rs. 47300.00
கொல்கத்தா Rs. 47.30 Rs. 47300.00