2020-ம் ஆண்டுக்‍கான நீட் நுழைவுத் தேர்வு - ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம்

Dec 2 2019 7:54PM
எழுத்தின் அளவு: அ + அ -
2020-ம் ஆண்டுக்‍கான இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர, நீட் நுழைவுத் தேர்வுக்‍கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று தொடங்கியது.

இளநிலை மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய படிப்புகளில் சேருவதற்கு அடுத்த ஆண்டு மே மாதம் 3ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று தொடங்கியது. www.ntaneet.nic.in, www.nta.ac.in ஆகிய இணையதளங்களில் வரும் 31-ம் தேதி வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள், விண்ணப்ப கட்டணங்களுடன் ஜிஎஸ்டி சேவைக் கட்டணத்தையும் செலுத்த வேண்டும். பொது பிரிவினருக்கு ஆயிரத்து 500 ரூபாயும், ஓபிசி மற்றும் பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஆயிரத்து 400 ரூபாயும், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு 800 ரூபாயும் விண்ணப்ப கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணத்தை செலுத்த ஜனவரி 1-ம் தேதி வரை தேசிய தேர்வு முகமை அவகாசம் அளித்துள்ளது. ஜூன் 4-ம் தேதிக்குள் தேர்வு முடிவுகளை வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு முதல், ஜிப்மர், எய்ம்ஸ் உள்ளிட்ட மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கும், நீட் நுழைவுத் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்‍கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3600.00 RS. 3780.00
மும்பை Rs. 3670.00 Rs. 3770.00
டெல்லி Rs. 3665.00 Rs. 3785.00
கொல்கத்தா Rs. 3699.00 Rs. 3839.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.30 Rs. 47300.00
மும்பை Rs. 47.30 Rs. 47300.00
டெல்லி Rs. 47.30 Rs. 47300.00
கொல்கத்தா Rs. 47.30 Rs. 47300.00