சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய கேரள அரசுக்கு உத்தரவிட கோரிக்கை - பிந்து அம்மணி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

Dec 2 2019 8:48PM
எழுத்தின் அளவு: அ + அ -
சபரிமலை செல்லும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய கேரள அரசுக்கு உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபாடு நடத்த அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரிய மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி தீர்ப்பளித்தது. அதே சமயம், சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபாடு நடத்தலாம் என்ற கடந்த ஆண்டு தீர்ப்புக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. ஆனால், ஐயப்பனை தரிசிக்க வரும் பெண்களுக்கு, உச்சநீதிமன்றத்திலிருந்து அனுமதி பெற்று வந்தால் மட்டுமே பாதுகாப்பு வழங்கப்படுமென கேரள அரசு அறிவித்தது. அண்மையில், ஐயப்பனை தரிசிக்க முயன்ற சில பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

அவ்வாறு தாக்குதலுக்குள்ளான பிந்து அம்மினி என்ற பெண் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவர் கடந்த ஜனவரி மாதம் சபரிமலை கோயிலில் தரிசனம் செய்தவர் ஆவார். அவரது மனுவில், சபரிமலை செல்லும் பெண்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க, கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறி செயல்படும் மாநில அரசின் அதிகாரிகள் அல்லது தனியார் நபர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3600.00 RS. 3780.00
மும்பை Rs. 3670.00 Rs. 3770.00
டெல்லி Rs. 3665.00 Rs. 3785.00
கொல்கத்தா Rs. 3699.00 Rs. 3839.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.30 Rs. 47300.00
மும்பை Rs. 47.30 Rs. 47300.00
டெல்லி Rs. 47.30 Rs. 47300.00
கொல்கத்தா Rs. 47.30 Rs. 47300.00