பிரியங்கா காந்தியின் வீட்டிற்குள் பாதுகாப்பை மீறி நுழைந்து செல்ஃபி கேட்டதால் அதிர்ச்சி - சி.ஆர்.பி.எஃப் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு காங்கிரஸ் கடிதம்
Dec 2 2019 8:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் வீட்டிற்குள் அடையாளம் தெரியாத நபர்கள் நுழைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட SPG பாதுகாப்பை ரத்து செய்வதாக மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. அதற்குப்பதிலாக, சோனியா காந்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு Z ப்ளஸ் பாதுகாப்பு வழங்கப்படுமெனவும், மத்திய அரசு அறிவித்தது. SPG பாதுகாப்பு ரத்து செய்யப்பட்ட ஒரு வாரத்திற்குள், காங்கிரஸ் பொதுச்செயலாளர் திருமதி.பிரியங்கா காந்தியின் வீட்டிற்குள் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், அத்துமீறி நுழைந்த சம்பவம் தற்போது வெளிசத்திற்கு வந்துள்ளது. கடந்த 26-ம் தேதி, லோதி பகுதியில் உள்ள பிரியங்காவின் வீட்டிற்குள், 3 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை ஆகியோர் திடீரென நுழைந்து, அவருடன் செல்பி எடுக்க முற்பட்டுள்ளனர். உரிய அனுமதி பெறாமல், அவர்கள் எவ்வாறு பிரியங்காவின் வீட்டிற்குள் நுழைந்தனர் என கேள்வி எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, பிரியங்கா காந்தியின் வீட்டில் ஏற்பட்டுள்ள இந்த பாதுகாப்பு மீறல் குறித்து, சி.ஆர்.பி.எஃப். அலுவலகத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.