ஸ்வீடன் அரச தம்பதி இந்தியா வருகை : விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் மாற்று ஏற்பாடு
Dec 3 2019 12:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஸ்வீடன் அரசரும், அவரது மனைவியும், இந்தியாவுக்கு வருவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு விமானத்தில், திடீர் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, ஏர் - இந்தியா பயணியர் விமானத்தில், அவர்கள் டில்லிக்கு வருகை தந்தனர்.
ஐரோப்பிய நாடான ஸ்வீடனின் அரச குடும்பத்தினர், 26 ஆண்டுகளுக்கு முன், நம் நாட்டிற்கு வந்திருந்தனர். அதற்கு பின், தற்போது தான், ஐந்து நாள் பயணமாக, ஸ்வீடன் அரசர் கார்ல் கட்சப், அவரது மனைவியும், அரசியுமான சில்வியா ஆகியோர், இந்தியாவிற்கு வந்துள்ளனர். முன்னதாக, ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரிலிருந்து, இவர்கள் வருவதற்காக, அந்த நாட்டின் சார்பில், சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், புறப்படுவதற்கு சில மணி நேரத்துக்கு முன், அந்த விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, அரசரும், அவரது குடும்பத்தினரும், ஸ்டாக்ஹோமிலிருந்து, டில்லிக்கு நேரடியாக வரும், ஏர் - இந்தியா பயணியர் விமானத்தில், சக பயணியருடன் சேர்ந்து வந்தனர். டெல்லி வந்தடைந்த அவர்களுக்கு அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.