அண்மை காலமாக நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு - காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டு

Dec 7 2019 5:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

மத்திய பாரதிய ஜனதா ஆட்சியில், நாட்டில் பெண்களுக்‍கு எதிரான வன்முறைகள் அதிகரித்துவிட்டதாக திரு. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள திரு. ராகுல் காந்தி, சுல்தான் பதேரி பகுதியில் நடந்த கூட்டத்தில் இன்று உரையாற்றினார். அண்மை காலமாக நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளதாகவும், நாள்தோறும் பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறுவதாகவும் அப்போது கவலை தெரிவித்தார்.

சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளதுடன், அவர்களுக்கு எதிரான வெறுப்புணர்வும் அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டினார். பழங்குடியினருக்கு எதிராக கொடூரங்கள் நடப்பதாகவும், அவர்களின் நிலங்கள் அபகரிக்‍கப்படுவதாகவும் தெரிவித்தார். சட்டம் ஒழுங்கை மக்கள் கையில் எடுத்து கொள்வதால், நாட்டின் அடிப்படை கட்டமைப்புகள் பாதிக்‍கப்படுவதாக திரு.ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்தார். நாட்டை வழிநடத்தும் தலைமையில் உள்ளவர்கள், வன்முறையையும், அதிகாரத்தையும் நம்புவதே இதற்கு காரணம் என்றும் ராகுல் காந்தி, மத்திய பா.ஜ.க. அரசை கடுமையாக சாடினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00