வரும் ஜனவரி மாதம், வெளிநாட்டிலிருந்து வெங்காயம் இறக்குமதி : மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் தாதாராவ் தகவல்
Dec 7 2019 5:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாட்டில் வெங்காய தட்டுப்பாடு நிலவிவரும் சூழலில், வரும் ஜனவரி மாதம், வெளிநாட்டிலிருந்து வெங்காயம் இறக்குமதி ஆகும் என, மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் தாதாராவ் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் உரையாற்றிய அவர், தொடர்ந்து உயர்ந்து வரும் வெங்காய விலையை கட்டுப்படுத்த, மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயம், வரும் ஜனவரியில் இந்தியா வரும் என்றும் கூறினார்.