கர்நாடக இடைத்தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் சட்டமன்ற குழுத்தலைவர் பொறுப்பில் இருந்து சித்தராமையா ராஜினாமா - மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் தினேஷ் குண்டுராவும் பதவி விலகல்

Dec 9 2019 5:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

கர்நாடக இடைத்தேர்தலில், திரு. எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க., ஆட்சியை தக்‍கவைத்துள்ள நிலையில், தோல்விக்‍கு பொறுப்பேற்று, காங்கிரஸ் சட்டமன்ற குழுத்தலைவர் பதவியை திரு. சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார்.

கர்நாடகாவில் 15 சட்டமன்ற தொகுதிகளுக்‍கு நடைபெற்ற இடைத்தேர்தலில், 3 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. 9 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 2 தொகுதிகளிலும், சுயேட்சை ஒரு தொகுதியிலும் முன்னிலையில் உள்ளன. இதன்மூலம், திரு. எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. அரசு, கர்நாடகாவில் ஆட்சியை தக்‍கவைத்துள்ளது.

இந்நிலையில், கர்நாடக இடைத்தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் சட்டமன்ற குழுத்தலைவர் பொறுப்பில் இருந்து திரு. சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸ் தலைவர் திருமதி. சோனியா காந்திக்‍கு, தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார். மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை திரு. தினேஷ் குண்டுராவும் ராஜினாமா செய்துள்ளார். இதனிடையே, தோல்வியை ஏற்றுக்‍கொள்வதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் திரு. சிவகுமார் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00