டெல்லியில் ஜே.என்.யூ. மாணவர்கள் மீது தடியடி - ராஷ்டிரபதி பவன் நோக்கி பேரணியாக சென்றபோது காவல்துறை அராஜகம்

Dec 9 2019 5:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழக கட்டண உயர்வு விவகாரத்தில் குடியரசுத்தலைவர் தலையிட வேண்டுமென நேரில் சந்தித்து முறையிட அனுமதிகோரி, ராஷ்டிரபதி பவன் நோக்கி பேரணியாக சென்ற மாணவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கல்விக் ‍கட்டணம் மற்றும் விடுதிக் கட்டண உயர்வை கண்டித்து, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, பல்கலைக் கழக மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவ பிரதிநிதிகளிடமிருந்து பரிந்துரைகளை கேட்டுப்பெற, மத்திய மனிதவளத்துறை சார்பில் அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட உயர்மட்டக்குழு, தனது அறிக்கையை கடந்த வாரம் அறிவித்தது. இந்த அறிக்கையைத் தொடர்ந்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனிடையே, கட்டண உயர்வு விவகாரத்தில் குடியரசுத்தலைவர் தலையிட வேண்டும் எனவும், இதுகுறித்து அவரை நேரில் சந்தித்து முறையிட அனுமதி வேண்டி, ஜே.என்.யூ. மாணவர்கள் ராஷ்டிரபதி பவன் நோக்கி பேரணியாக சென்றனர். ஆனால், போலீசார் மாணவர்களை பாதியிலேயே தடுத்து நிறுத்தினர். மேலும், பல்கலைக்கழகத்தின் அனைத்து வாசல்களும் பூட்டப்பட்டதோடு, பல்கலைக்கழகத்திற்கு செல்லும் உத்யோக் பவன், லோக் கல்யாண் மார்க் மற்றும் மத்திய தலைமைச் செயலகம் ஆகிய மெட்ரோ ஸ்டேஷன்களில் ரயில்கள் நிற்காமல் சென்றன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00