பாலியல் குற்றவாளிகளுக்கு 6 மாதங்களுக்குள் தண்டனை வழங்க வலியுறுத்தல் - டெல்லி மகளிர் ஆணைய தலைவர் 6-வது நாளாக உண்ணாவிரதம்

Dec 9 2019 9:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

பாலியல் குற்றவாளிகளுக்கு 6 மாதங்களுக்குள் தண்டனை வழங்க வலியுறுத்தி, டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மலிவால், 6-வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார்.

தெலங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தை தொடர்ந்து உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில், பாலியல் புகாரளித்த இளம்பெண், சாலையிலேயே எரித்துக் கொலை செய்யப்பட்டார். பாலியல் குற்றங்கள் புரிபவர்களுக்கு 6 மாதத்திற்குள் தண்டனை வழங்க வேண்டுமென, மத்திய அரசை வலியுறுத்தி, டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மலிவால், கடந்த 3-ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார். அவரது போராட்டம் 6-வது நாளாக தொடரும் வேளையில், ஸ்வாதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், பெரும்பாலான காவல்துறையினர் முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருப்பதால், பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகவும், எனவே அவற்றை திரும்பப்பெற வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் நிர்பயா நிதியை மாநிலங்களுக்கு வழங்க வேண்டுமென, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணிக்கும், ஸ்வாதி மலிவால் கடிதம் எழுதியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00