ஃபரூக்‍ அப்துல்லா கைது விவகாரத்தை எழுப்பி நாடாளுமன்றத்தில் எதிர்க்‍கட்சிகள் அமளி - நிலைமை சீரடையும் வரை விடுதலை குறித்து கருத்து தெரிவிக்‍க முடியாது என அமித்ஷா திட்டவட்டம்

Dec 10 2019 1:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

காஷ்மீரில் வீட்டுக் காவலில் வைக்‍கப்பட்டுள்ள திரு. ஃபரூக்‍ அப்துல்லா உள்ளிட்டோரின் விடுதலை குறித்து மத்திய அரசு கருத்து தெரிவிக்‍க முடியாது என்றும் உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் காவலில் வைக்‍கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை விடுதலை செய்யுமாறு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், எதிர்க்‍கட்சிகள், தினந்தோறும் வலியுறுத்தி வருகின்றன. இதுகுறித்து, மக்‍களவையில் இன்று பேசிய திரு. அமித்ஷா, காங்கிரஸ் ஆட்சி காலத்தில், திரு. ஃபரூக்‍ அப்துல்லாவின் தந்தை 11 ஆண்டுகள் சிறை வைக்‍கப்பட்டதாக கூறினார். ஆனால், பா.ஜ.க. அரசு அதுபோன்று செய்யாது என கூறிய அமித்ஷா, காஷ்மீரில் காவலில் வைக்‍கப்பட்டுள்ள அரசியல் தலைவர்கள், தேவையின்றி, ஒரு நாள் கூட சிறைவாசம் அனுபவிக்‍க மாட்டார்கள் என தெரிவித்தார். காஷ்மீரில் நிலவும் சூழல் பொறுத்தே, சில தலைவர்கள் வீட்டுக்‍காவலில் வைக்‍கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமித்ஷா, அவர்களை விடுதலை செய்வது குறித்து அம்மாநில நிர்வாகமே முடிவு செய்யும் என குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00