மஹாராஷ்டிரா அமைச்சரவை விவகாரத்தில் நீடிக்கும் குழப்பம் : உள்துறை, நிதித்துறையை கேட்கும் தேசியவாத காங்கிரஸ்

Dec 10 2019 7:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

மஹாராஷ்டிர மாநிலத்தில், திரு. உ‌த்தவ் தாக்கரே தலைமையிலான புதிய அரசு பதவியேற்று, 10 நாட்களுக்கும் மேலாகியுள்ள நிலையில், இதுவரை அமைச்சரவை பதவியேற்கவில்லை. மூன்று கட்சிகளிடையே நீடிக்கும் குழப்பம் தான், இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

மஹாராஷ்டிராவில், சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள், மஹாராஷ்டிரா முன்னேற்றக் கூட்டணி என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணித் தலைவர் திரு. உத்தவ் தாக்கரே, மஹாராஷ்டிர முதலமைச்சராக, கடந்த நவம்பர் 28-ம் தேதி பதவியேற்றார். அப்போது, கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 6 பேர் மட்டுமே அமைச்சர்களாக பதவியேற்றனர். ஆனால், அவர்களுக்கு இதுவரை இலாகாக்கள் ஒதுக்கப்படவில்லை.

அமைச்சரவையில், தங்களது கட்சிகளுக்கு இலாகா ஒதுக்குவது குறித்து, சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். உள்துறை, நிதித்துறை உள்ளிட்ட முக்கிய இலாகாக்களை, தேசியவாத காங்கிரஸ் கட்சி கேட்டு அடம்பிடித்து வருவதாகவும், இதற்கு, சிவசேனா எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறப்படுகிறது.

அமைச்சரவை விவகாரத்தில், மூன்று கட்சிகளி‌டையே ஒருமித்த கருத்து ஏற்படாததால், குழப்பம் நீடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. புதிய அரசு பதவியேற்று, 10 நாட்களுக்கும் மேலாகியுள்ள நிலையில், இதுவரை அமைச்சரவை பதவியேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00