பூமியை கண்காணிக்கும் செயற்கைகோளுடன் நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்வி-சி48 - 24 மணிநேர கவுண்டவுன் தொடக்கம்

Dec 11 2019 7:32AM
எழுத்தின் அளவு: அ + அ -

பூமியை கண்காணிக்கும் செயற்கைகோளுடன் பிஸ்எல்வி-சி48 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்பட உள்ளது. அதற்கான 24 மணிநேர கவுண்டன் தொடங்கியது.

இஸ்ரோவின் ரிசாட் 2பிஆர்1 செயற்கைகோள்,பிஎஸ்எல்வி - சி48 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள ஒன்றாவது ஏவுதளத்தில் இருந்து, நாளை விண்ணில் செலுத்தப்படவுள்ளது. இதற்கான 24 மணி நேர கவுண்டவுன் இன்று மாலை 4.40 மணிக்கு தொடங்கியது.

ரிசாட் 2பிஆர்1 என்ற செயற்கைகோள், வணிக ரீதியிலான அமெரிக்காவின் 6 செயற்கைகோள்கள், இத்தாலி, இஸ்ரேல், ஜப்பான் ஆகிய நாடுகளின் செயற்கைகோள்கள் என மொத்தம் 10 செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்படவுள்ளன.

628 கிலோ எடை கொண்ட ரிசாட் 2பிஆர்1 செயற்கைகோள், நவீன ரேடார் மூலம் பூமியை துல்லியமாக படம் பிடிக்க வல்லது. 5 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்ட இந்த செயற்கைகோள், கண்காணிப்பு பணிக்காக அனுப்பப்படுகிறது. இந்த செயற்கைக்கோள் மூலம் கிடைக்கும் தரவுகள் வேளாண்மை, பேரிடர் மேலாண்மை போன்றவற்றிற்கு பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00