ஜே.என்.யூ மாணவர்கள் - மனித வளத்துறை அதிகாரிகளுடன் சந்திப்பு : தேர்வுகளை ஒத்திவைக்க மனிதவளத்துறை அமைச்சகம் உறுதியளித்ததாக தகவல்

Dec 10 2019 8:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக கட்டண உயர்வை திரும்பப் பெற வலிறுத்தி, மாணவ சங்கப் பிரதிநிதிகள் மத்திய மனித வளத்துறை அமைச்சக அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கல்விக் ‍கட்டணம் மற்றும் விடுதிக் கட்டண உயர்வைக் கண்டித்து, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, பல்கலைக் கழக மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்விவகாரம் தொடர்பாக குடியரசுத்தலைவரை நேரில் சந்திக்கச் சென்ற மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். நாளை மறுதினம் முதல் பல்கலைக் கழக தேர்வுகள் தொடங்கவுள்ள நிலையில், மாணவர் சங்க பிரதிநிதிகள் மத்திய மனித வளத்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். கட்டண உயர்வை முழுமையாக திரும்பப்பெரும் வரை தங்களது போராட்டம் தொடருமென அவர்களிடம் தெரிவித்த மாணவர்கள், தேர்வை புறக்கணிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, தேர்வை ஒத்தி வைப்பதற்கு மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் உறுதியளித்ததோடு, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர ஜே.என்.யூ. நிர்வாகத்துடன் பேச்சுவார்த்த நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00