நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 புள்ளி 6 சதவீதமாகக் குறையும் : மூடிஸ் முதலீட்டாளர்கள் சேவை நிறுவனம் கணிப்பு
Dec 14 2019 1:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.6 சதவீதமாகக் குறையும் என்று மூடிஸ் முதலீட்டாளர்கள் சேவை நிறுவனம் கணித்துள்ளது. குறைந்துவரும் வேலைவாய்ப்புகள், மக்களின் நுகர்வுப் பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மந்தநிலை ஆகியவற்றால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறையும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐ.எம்.எஃப். என்னும் சர்வதேச நிதியமும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் 6.1 சதவீதமாகச் சரியும் என்று தெரிவித்திருந்தது. உலக வங்கி வெளியிட்ட அறிவிப்பில் 6 சதவீதமாக சரியும் என்று கணித்திருந்தது. ஆசிய மேம்பாட்டு வங்கியும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.6 சதவீதமாகக் குறையும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.