நாடு முழுவதும் இன்று முதல் அமலானது ஃபாஸ்டேக் முறை : ஃபாஸ்டேக் அட்டை பெறாதவர்களுக்கு கெடு நீட்டிப்பு

Dec 15 2019 3:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

மத்திய அரசு கொண்டு வந்துள்ள Fastag முறை நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் இன்று முதல் அமலுக்கு வந்தது. Fastag அட்டை பெறாதவர்கள் அடுத்த மாதம் 15ம் தேதி வரை பணமாக செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில், வாகனம் ஓட்டுவோரிடம் அதிக கட்டணம் வசூலித்தல், நீண்ட நேரம் காத்திருக்கச் செய்தல் போன்ற பிரச்சனைகளை சரி செய்வதற்காக, Fastag என்ற புதிய தொழில்நுட்பத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டம் இன்று முதல், நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. இதன் மூலம், சுங்கச்சாவடி வழித்தடத்தில் வாகனம் செல்லும் போது, தடுப்புக்கம்பிக்கு மேல் உள்ள ஸ்கேனர், வாகனத்தில் உள்ள கார்டை ஸ்கேன் செய்து, சுங்கக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் டெபிட் செய்து கொள்ளும். Fastag பெறாமல் பணமாகச் செலுத்தினால், இன்று முதல் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று மத்திய அரசு ஏற்கெனவே தெரிவித்திருந்தது. ஆனால் Fastag பெறாதவர்கள் அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் அதனை பெற்றுக்கொள்ள காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு வசதியாக எல்லா சுங்கச்சாவடிகளிலும் கட்டணத்தை 25 சதவிகித கவுண்டர்களில் பணமாக செலுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00