தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக செயல்பட முடியாது : மேற்கு வங்க மாநில ஆளுநர் ஜக்தீப் தன்கர் திட்டவட்டம்

Dec 15 2019 4:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

அரசியல் சாசனப்படி பதவியேற்ற எவரும், தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக செயல்பட முடியாது என, மேற்கு வங்க மாநில ஆளுநர் திரு. ஜக்தீப் தன்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, புதிய சட்டமாக அமலுக்கு வந்துள்ள தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சட்டத்திற்கு எதிராக, கொல்கத்தாவில் மாபெரும் பேரணி நடைபெறும் என்று, மேற்கு வங்க மாநில முதலமைச்சர் செல்வி. மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, கொல்கத்தாவில் செய்தியாளர்களைச் சந்தித்த மேற்கு வங்க மாநில ஆளுநர் திரு. ஜக்தீப் தன்கார், நாடு முழுவதும் தேசிய குடியுரிமை திருத்த சட்டம் பொருந்தும் என்றும், இந்த சட்டத்தின்படி செயல்பட மாட்டோம் என கூற முடியாது என்றும் தெரிவித்தார்.

அரசியல் சாசனப்படி பதவியேற்ற எவரும், தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக செயல்பட முடியாது என்றும், இந்த விவகாரம் அரசியலாக்கப்படக் கூடாது என்று ஒவ்வொருவரையும் தான் கேட்டுக் கொள்வதாகவும், ஆளுநர் திரு. ஜக்தீப் தன்கர் கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00