இந்தியாவின் முகவரி அறிவுசார் மூலம் உலகிற்கு தெரியவரும் : இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேச்சு
Jul 3 2019 3:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இதிகாசங்களை தாண்டி இந்தியாவின் முகவரி அறிவுசார் உரிமையின் காரணமாக விவசாயம் முதல் விண்வெளி வரை உலகிற்கு தெரியப் போகிறது என இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள டாக்டர். எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைகழகத்தில், அறிவு சார் சொத்துரிமை குறித்து தேசிய அளவிலான பயிற்சி பட்டறை இன்று தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய விஞ்ஞானி திரு. மயில்சாமி அண்ணாதுரை, காப்புரிமை என்பது அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயம் என்றும், குறிப்பாக வர்த்தக மேம்பாட்டிற்கு அவை மிகவும் அவசியம் என்றும் குறிப்பிட்டார்.