40 நிமிடங்களில் 60 வகை இயற்கை உணவுகளை சமைத்த மாணவி - சாதனை புத்தகங்களில் இடம்பெற்ற 10-ம் வகுப்பு மாணவி

Jan 31 2021 5:20PM
எழுத்தின் அளவு: அ + அ -
திண்டுக்கல்லைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவி 40 நிமிடங்களில் 60 வகையான பாரம்பரிய இயற்கை உணவுகளை தயாரித்து சாதனை படைத்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பூத்தாம்பட்டியைச் சேர்ந்த தர்ஷினி என்ற 13 வயது சிறுமி, தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர், பாரம்பரிய இயற்கை உணவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, 40 நிமிடங்களில் 60 வகை இயற்கை உணவுகளை தயாரித்து சாதனை படைத்துள்ளார். வீட்டில் வளரும் ஓமவல்லி, ஆவாரம்பூ, வல்லாரை, மிளகுதக்காளி, மல்லி துளசி, புதினா, வெற்றிலை உள்ளிட்ட மூலிகைகளை கொண்டு தோசை வகைகள், கம்பு, சோளம், சுண்டல் போன்ற முளைகட்டிய தானியங்களைக் கொண்டு சிற்றுண்டி வகைகள், நாட்டுச்சக்கரை-தேன் சேர்க்கப்பட்ட இயற்கை குளிர்பானங்கள், கூழ் வகைகள் உள்ளிட்ட 60 வகை இயற்கை உணவுகளை 40 நிமிடங்களில் தயாரித்துள்ளார். யுனிவர்சல் அச்சீவர்ஸ் மற்றும் பியூச்சர் கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் உள்ளிட்ட உலக சாதனை புத்தகங்களில் மாணவி தர்ஷினி இடம்பெற்றுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00