ஷீரடி சாய்பாபா பிறந்த இடம் தொடர்பாக, மஹாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்த கருத்திற்கு எதிர்ப்பு - ஷீரடியில் இன்று முழு கடையடைப்பு போராட்டம்

Jan 19 2020 11:28AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஷீரடி சாய்பாபா பிறந்த இடம் தொடர்பாக, மஹாராஷ்டிர மாநில முதலமைச்சர் திரு. உத்தவ் தாக்கரே தெரிவித்த கருத்திற்கு எதிராக, ஷீரடியில் இன்று முழு கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும், வழக்கம்போல் ஷீரடி சாய்பாயா கோவில் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய, மஹாராஷ்டிர மாநில முதலமைச்சர் திரு. உத்தவ் தாக்கரே, பர்பானி மாவட்டம், பத்ரியில் உள்ள, 'சாய் ஜன்மஸ்தான்' என்ற இடமே, ஷீரடி சாய்பாபாவின் பிறப்பிடமாக கருதப்படுவதாகவும், அங்கு பல்வேறு வசதிகளை மேம்படுத்துவதற்காக, 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். இதற்கு, ஷீரடி பகுதி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், முதலமைச்சர் திரு. உத்தவ் தாக்கரேவின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஷீரடி பகுதியில், முழு கடையடைப்பு போராட்டத்திற்கு, அப்பகுதி மக்கள் அழைப்பு விடுத்துள்ளனர். மேலும், சாய்பாபாவின் பிறப்பிடம் பத்ரி த‌ான் என்று, முதலமைச்சர் உத்தவ் தாக்கரே வெளியிட்ட அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே, ஷீரடி சாய்பாபா கோவில், வழக்கம்போல் இன்று திறந்திருக்கும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00