சபரிமலை ஆபரணங்கள் தொடர்பாக ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி நியமனம் - கோயில் நகைகளை பராமரிப்பது தொடர்பான வழக்‍கில் உச்சநீதிமன்றம் உத்தரவு

Feb 7 2020 2:07PM
எழுத்தின் அளவு: அ + அ -
சபரிமலை அய்யப்பன் கோயில் ஆபரணங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்‍கை தாக்‍கல் செய்ய, கேரள உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சபரிமலை கோயிலை நிர்வகிப்பது மற்றும் ஆபரணங்களை பாதுகாப்பது தொடர்பான வழக்‍கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்‍கு வந்தது. அப்போது, சபரிமலை கோயில் நிர்வாகம், பக்தர்கள் நலனுக்காக சட்டம் இயற்றுவதில் என்ன சிக்‍கல் உள்ளது? சபரிமலை கோயிலுக்‍கு 16 வகை ஆபரணங்கள்தான் உள்ளனவா? நகைகள், பந்தளம் அரச குடும்ப பாதுகாப்பில் இருந்தாலும், அவை கடவுளுக்கு சொந்தமானதுதானே? என கேரள அரசுக்‍கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியது.

மேலும், சபரிமலை ஆபரணங்கள் குறித்து ஆய்வு செய்ய, கேரள உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி திரு. C.N. ராமச்சந்திரன் நாயர் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது. இக்‍குழு, 4 வாரங்களுக்‍குள் ஆய்வை முடித்து, சீலிடப்பட்ட உறையில் அறிக்‍கை தாக்‍கல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்‍கப்பட்டது. வழக்கு விசாரணை 4 வாரங்களுக்‍கு ஒத்திவைக்‍கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00