திருவண்ணாமலையில் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலய மயான சூரை உற்சவம் : 5,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு

Feb 23 2020 4:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவண்ணாமலையில் நடைபெற்ற ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலய மயான சூரை உற்சவத்தில் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் ஆண்டுதோறும் மாசி மாதம் அமாவாசை தினத்தில் மயான சூரை உற்சவம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்தவகையில், பருவதராஜ குல வீதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன், சிம்ம வாகன மகிஷாசூர சம்ஹார அலங்காரத்துடன் ரதத்தில் மும்முக கப்பறையுடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். காளிவேஷம் தரித்தும், உடலில் அலகு குத்தியும் பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் சென்னை, காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஆரணி, செய்யார், வந்தவாசி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதியில் இருந்து 5000த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல், கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோயிலில், சிவராத்திரியை முன்னிட்டு மயானக் கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. மாசி மயானக் கொள்ளை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி சுவாமி வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பவாடராயன், அங்காளம்மன் போன்று வேடமிட்டு வள்ளாளன் கோட்டை இடித்தல் நிகழ்ச்சியும், குடலை உருவி மாலைப்போடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00