கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்குவதையொட்டி சாம்பல் புதன் கடைப்பிடிப்பு : தேவாலயங்களில் நடைபெற்ற திருப்பலி மற்றும் சிறப்பு பிரார்த்தனை

Feb 26 2020 2:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்குவதையொட்டி இன்று சாம்பல் புதன் கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி தேவாலயங்களில் நடைபெற்ற திருப்பலி மற்றும் சிறப்பு பிரார்த்தனைகளில் திரளானோர் பங்கேற்றனர்.

ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்த காலத்தை, உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் தவக்காலமாக கடைப்பிடிக்கின்றனர். ஏசு சிலுவையில் அறையப்பட்ட நாளை புனித வெள்ளியாக அனுசரிக்கும் கிறிஸ்தவர்கள், அவர் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் ஞாயிறை திருவிழாவாக கொண்டாடுகின்றனர். கிறிஸ்தவர்களின் தவக்காலம் இன்று தொடங்குவதையொட்டி சாம்பல் புதன் இன்று கடைப்பிடிக்கப்பட்டது.

உலகப்புகழ் பெற்ற நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருப்பலியில் பங்கேற்றவர்களின் நெற்றியில் சாம்பல் பூசப்பட்டது.

திண்டுக்கலில் உள்ள பழமை வாய்ந்த தூய வியாகுல அன்னை திருத்தலத்தில் அதிகாலை சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. கிறிஸ்தவ மக்‍கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர். திருப்பலியின் போது பங்குத்தந்தை அனைவரது நெற்றியிலும் விபூதியை பூசி வழிபாடு நடத்தினார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் புகழ்பெற்ற கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்தில் நடைபெற்ற சாம்பல் புதன் தவக்கால தொடக்க திருப்பலி வழிபாட்டில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருச்சி தூய மரியன்னை பேராலயத்தில் நடைபெற்ற சாம்பல் புதன் சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஏசு கிறிஸ்துவின் தவக்காலத்தை நினைத்து வழிபாடு செய்தனர். இதேபோல், உலக மீட்பர் பசலிக்கா ஆலயம், புனித அந்தோணியார் ஆலயம், புனித சூசையப்பர் ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களிலும் சாம்பல் புதனையொட்டி திருப்பலிகள் நடைபெற்றன.

கிருஷ்ணகிரியில் உள்ள தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில், தவக்காலத்திற்கான சாம்பல் புதன் திருநாள் சிறப்பு திருபலி நடைபெற்றது. திருப்பலியை, திருத்தல பங்குத்தந்தை திரு.சூசைராஜ் முன்னின்று நடத்தினார். திரளான கிறிஸ்தவ மக்களும் கலந்துக்கொண்டனர்.

புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் பசலிக்கா தேவாலயத்தில் நடைபெற்ற திருப்பலியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தூய ஜென்மராக்கினி மாதா கோயில், வில்லியனூர் லூர்து மாதா தேவாலயம், நெல்லித்தோப்பு வின்னேற்பு அன்னை உள்ளிட்ட திருத்தலங்களிலும் சாம்பல் புதனையொட்டி சிறப்பு திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00