திருப்பதி ஏழுமலையான் கோயிலை திறக்‍க ஆந்திர அரசு அனுமதி - பாதுகாப்பு அம்சங்களுடன் பக்‍தர்களை அனுமதிக்‍க கோவில் நிர்வாகம் ஏற்பாடு

May 16 2020 2:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பதி ஏழுமலையான் கோயிலை திறக்‍க ஆந்திர அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து கோயிலை திறப்பதற்கான முன்னெச்சரிக்‍கை நடவடிக்‍கைகளை தேவஸ்தானம் மேற்கொண்டு வருகிறது.

கொரோனா தேசிய ஊரடங்கு காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயில் சுமார் 50 நாட்களாக மூடப்பட்டுள்ளது. கோயிலில் முக்‍கிய பூஜைகளுக்‍கு மட்டும் அனுமதி அளிக்‍கப்பட்டு, பக்தர்கள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆந்திர மநில இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களைத் திறக்க அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கான விதிமுறைகளை அறிவித்து, அரசாணையும் வெளியிட்டுள்ளது.

இதையடுத்து, திருப்பதி ஏழுமலையான் கோயில், காளஹஸ்தி சிவன் கோயில் உள்ளிட்டவை விரைவில் திறக்‍கப்படவுள்ளன. தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே கோயிலுக்‍குள் பக்‍தர்கள் அனுமதிக்‍கப்படவுள்ளனர். ஆதார் அட்டை மூலம், ஆன்லைனில் டிக்‍கெட் வழங்கி, ஒரு மணி நேரத்திற்கு 250 பேரை அனுமதிக்‍க திட்டமிடப்பட்டுள்ளது. பக்‍தர்கள் அனைவரும் கட்டாயம் முகக்‍கவசம் அணியவும், சுரங்க கிருமிநாசினி பாதை வழியாக சமூக இடைவெளியுடன் வரிசையில் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00