ஆடி அமாவாசையையொட்டி புனித நீராடத் தடை - வெறிச்சோடிய ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை மற்றும் திருச்சி அம்மா மண்டபம் காவிரி படித்துறை

Jul 20 2020 1:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆடி அமாவாசையையொட்டி புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளதால், ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை வெறிச்சோடியது. திருச்சியில், அம்மா மண்டபம் காவிரி படித்துறை மூடப்பட்டதால், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய முடியாமல் பக்தர்கள் ஏமாற்றத்திற்கு உள்ளாகினர்.

ஆடி அமாவாசை இன்று கடைபிடிக்கப்படும் நிலையில், கொரோனா ஊரடங்கால், ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடவும், தர்ப்பணம் கொடுக்கவும், மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால், பாம்பன் பாலத்தின் நுழைவாயிலிலும், ராமேஸ்வரத்தின் முக்கிய நகர் பகுதிகளிலும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, அக்னி தீர்த்தக் கடல் பகுதியில், ஏராளமான போலீசார், கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இதனால் ராமேஸ்வரம் வெறிச்சோடி காணப்படுகிறது.

இதேபோல், திருச்சியில், புனித நீராடவும், தர்ப்பணம் கொடுத்து வழிபடவும் மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்திருப்பதால், அம்மா மண்டபம் படித்துறை மூடப்பட்டது. மேலும், பொதுமக்கள் நுழைவதை தடுக்க, அங்கு, தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எனினும், திருச்சி ஓடத்துறை காவிரி ஆற்றில், ஊரடங்கையும் மீறி, பொதுமக்கள் புனித நீராடி வழிபட்டனர்.

ஈரோடு பவானி கூடுதுறையில் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளதால், அங்கு வந்த பக்தர்கள், தலையில் தண்ணீர் தெளித்துக்கொண்டு, ஏமாற்றதுடன் திரும்பிச் சென்றனர். சிலர், தங்களது வீடுகளிலேயே புரோகிதர்களை வரவழைத்து தர்ப்பணம் கொடுத்தனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் மற்றும் கோடியக்கரை கடற்பகுதி, மாவட்ட நிர்வாகத்தின் தடை காரணமாக, மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. எனினும், ஒரு சிலர், தடையை மீறி, கடலில் குளித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00