முருகப் பெருமான் கோவில்களில் பக்தர்களின்றி எளிமையாக நடைபெற்ற சூரசம்ஹாரம் நிகழ்ச்சி

Nov 20 2020 8:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முருகப் பெருமான் கோவில்களில், பக்தர்களின்றி, சூரசம்ஹாரம் நிகழ்ச்சி எளிமையாக நடைபெற்றது.

கந்த சஷ்டியின் இறுதி நிகழ்வாக, சூரனை முருகப் பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி, முருகன் கோவில்களில் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். ஆனால் இந்தாண்டு,​ கொரோனா பரவல் காரணமாக, இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், சூரசம்ஹாரம் நிகழ்ச்சி பக்தர்களின்றி தமிழகம் முழுவதும் மிக எளிமையாக நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் பழநியில், நான்கு கிரி வீதிகளிலும் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. வடக்கு கிரிவீதியில் தாரகாசூரன் வதமும், கிழக்கு கிரிவீதியில் பானுகோபசூரன் வதமும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகாசூரன் வதமும், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் வதமும் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் திருமதி. விஜயலட்சுமி, திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி., திரு. முத்துச்சாமி ஆகியோர் பங்கேற்றனர்.

திருச்சி மாநகரில், 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. கஜமுக சூரனையும், அதைத் தொடர்ந்து, சிங்கமுக சூரனையும் வதம் செய்து, இறுதியாக, ஆட்டுக்கிடா வாகனத்தில் சிவசுப்ரமணிய சுவாமி எழுந்தருளி சூரனை வதம் செய்தார். கோவில் வெளியே நின்றபடி, இந்நிகழ்வை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மதுரை மாவட்டம் திருப்பரகுன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி பக்தர்களின்றி நடைபெற்றது. சுப்பிரமணியசுவாமி தங்கமயில் வாகனத்திலும், வீரபாகுத்தேவர் வெள்ளைக் குதிரை வாகனத்திலும் எழுந்தருளி கோவில் வளாகத்தில் உள்ள திருவாட்சி மண்டபத்தில் பத்மாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், நாகராஜா கோவிலில் உள்ள பாலமுருகன் சன்னிதானத்தில், சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. கொரோனா தொற்று காரணமாக, பக்தர்கள் இல்லாமல் எளிமையாக இந்த விழா நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பிரசித்தி பெற்ற பச்சமலை பாலமுருகன் கோவிலில், சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, இந்தாண்டு சூரசம்ஹார நிகழ்ச்சியில் குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டுமே பங்கேற்றனர்.‍

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஜலகண்டேஸ்வரர் கோவிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி எளிமையாக நடைபெற்றது. பக்தர்கள் அரோகரா என்ற முழக்கத்துடன் இந்த காட்சியை பார்த்து ரசித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்தசஷ்டியையொட்டி, புஷ்பாஞ்சலி நடைபெற்றது. மலைக்கோவிலில் காவடி மண்டபத்தில் உற்சவர் சண்முகர் வள்ளி - தெய்வாணை தாயாருடன் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சண்முகநாதனுக்கு 2 ஆயிரம் கிலோ மலர்களால் புஷ்பாஞ்சலி நடைபெற்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00