கார்த்திகை தீபத் திருநாள் : தமிழகத்திலுள்ள பிரசித்தி பெற்ற தலங்களில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

Nov 29 2020 3:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

கார்த்திகை தீபத் திருநாளையொட்டி, தமிழகத்திலுள்ள பிரசித்திபெற்ற தலங்களில் பக்‍தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

திண்டுக்‍கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்‍கோயிலில், தீபத்திருநாளையொட்டி, பக்‍தர்கள் இன்று அதிகாலை முதலே சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கொரோனா கட்டுப்பாடு காரணமாக, அதிகாலை 4 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இன்று மாலை மலைக்‍கோயிலில் நடைபெறும் கார்த்திகை தீபத்திருநாள் நிகழ்ச்சியில் பக்தர்களுக்‍கு அனுமதி இல்லை. இதனால் காலை முதலே அடிவாரம் கிரி வீதியில் மலைக்கோயில் செல்வதற்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆன்லைனில் பதிவு செய்த பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.

திருக்கார்த்திகை திருவிழாவையொட்டி, கும்பகோணம் அருகிலுள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி ஆலயத்தில் ஆயிரக்கணக்கானோர் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மூலவர் தங்க கவச அலங்காரத்தில் காட்சியளித்தார். இன்று இரவு 8 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும் என்றும், 8 மணிக்குப் பின்னர் ஆலய நிர்வாகத்தினர் மற்றும் அர்ச்சகர்கள் மட்டும் கலந்துகொள்ளும் தீபக்காட்சி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்‍கம் அடுத்த நடுபழனி மரகத பால தண்டாயுதபாணி கோயிலில் திருக்கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, முருகப்பெருமான், வள்ளி தெய்வானைக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00