சபரி மலை ஐய்யப்பன் கோயில் தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு இன்று தொடக்கம் - நாள்தோறும் 2,000 பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி

Dec 2 2020 8:36AM
எழுத்தின் அளவு: அ + அ -

சபரி மலை ஐய்யப்பன் கோயில் தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு இன்றுமுதல் தொடங்கியுள்ள நிலையில், நாள்தோறும் 2,000 பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்‍கப்பட உள்னர்.

கொரோனா காலம் என்பதால் சபரிமலையில் குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்களே தரிசனத்திற்கு அனுமதிக்கப் படுகின்றனர். திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 1000 பக்தர்களும், சனி, ஞாயிற்று கிழமைகளில் 2000 பக்தர்களும் அனுமதிக்கப்பட்டு வந்தனர். பக்தர்கள் வருகை குறைந்ததால் கோயில் வருமானமும் கடுமையாக குறைந்தது. இதையடுத்து பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும் என்று அரசிடம் தேவசம்போர்டு கோரிக்கை விடுத்தது. தினமும் 10 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்கவேண்டும் என்று தேவசம்போர்டு கோரியது. ஆனால் கடந்த சில நாட்களாக சபரிமலையில் போலீசார் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பரவியதை தொடர்ந்து பக்தர்கள் எண்ணிக்கையை மிக கூடுதலாக அதிகரிக்க வேண்டாம் என்று கேரள அரசு முடிவு செய்தது.

இந்நிலையில் பக்தர்கள் எண்ணிக்கையை திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் 2 ஆயிரமாகவும், சனி ஞாயிறு கிழமைகளில் தலா 3 ஆயிரமாகவும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00